சோலார் வாகனங்களின் காலம் வெகு தொலைவில் இல்லை!

சோலார் வாகனங்களின் காலம் வெகு தொலைவில் இல்லை!
Updated on
2 min read

பெட்ரோல் டீசலின் விலை குறைந்து வந்தாலும் மாறிவரும் பொருளாதார சூழலில் இது தொடராது என்பது உறுதியானதால்தான் மாற்று எரிசக்தி குறித்த சிந்தனை வேகம் எடுத்துள்ளது.

பேட்டரியில் இயங்கும் வாகனங்களால் சூழல் பாதிப்பு குறைவு என்பதால் அதை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் தினசரி தேவைக்காக இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்து பவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தரம் மற்றும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள குறைந்த வருவாய் ஈட்டும் மக்கள் ஆவார். இவர்களின் அன்றாட செலவு களில் பெட்ரோலுக்கான ஒதுக்கீடு கணிசமானதாக உள்ளது.

சிக்னலில் 40 நொடிக்கு சிகப்பு விளக்கு விழுந்தால் போதும், இவர்கள் வாகனங்களை ஆஃப் செய்து விடுவர். இந்தளவுக்கு பெட்ரோல் விலை இவர்களை பயமுறுத்துகிறது.

இந்தியா போன்ற வெயில் காயும் நாடுகளுக்கு சூரிய மின்னாற்றலில் இயங்கும் வாகனங்கள் மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.

அத்தகைய வாகனங்கள் இந்திய சாலைகளில் வலம் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் இத்தகைய வாகனங்களை உருவாக்கியுள்ள சென்னை எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

இவர்கள் சூரிய ஆற்றலில் இயங்கும் ஸ்கூட்டரை வடிவமைத் துள்ளனர். முழுக்க முழுக்க சூரிய ஒளியால் இயங்கும் அந்த சோலார் ஸ்கூட்டரில் நிறைய புதிய அம்சங்கள் உள்ளன.

விக்னேஷ், கீர்த்தி பிரசாந்த், சரத் ராஜன் ஆகியோர் தங்களின் இறுதியாண்டு புராஜெக்ட்டுக்காக இதனை உருவாக்கினர். காப் புரிமை கிடைத்த பிறகு இதை சந்தைப்படுத்தும் யோசனையும் உள்ளதாக இவர்கள் தெரிவித் துள்ளனர்.

இது தொடர்பாக அந்த மாணவர்களில் ஒருவரான விக்னேஷை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது:

மாற்று எரிசக்தி வாகனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். சூரிய ஆற்றலில் இயங்கும் இந்த ஸ்கூட்டரை உருவாக்குவதற்கு 6 மாதம் ஆனது. மாற்று எரிசக்தி என்றால் எல்லோருக்குமே பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் தான் ஞாபகம் வரும். ஆனால் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் இன்ன மும் பிரபலமடையாததற்கு பல காரணங்கள் உள்ளன.

இத்த கைய பேட்டரி வாகனங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் அதாவது ஒருமுறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் ஓடும்? பாதி வழியில் சார்ஜ் தீருமா? வாகனத்தின் வேகம் எப்படி? எவ்வளவு எடையை தாங்கும்? என பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. சூரிய ஆற்றலில் இயங்கும் இந்த ஸ்கூட்டருக்கும் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டருக்கும் ஒரே இயக்க முறைதான்.

எங்களது சோலார் ஸ்கூட்டர், பார்ப்பதற்கு எல்லோரும் பயன்படுத்துவது மாதிரி தான் இருக்கும். சூரிய ஒளியை உள்வாங்குவதற்காக மேற் புறத்தில் பேனல் ஒன்றை வைத்துள்ளோம்.

ஸ்கூட்டரில் இரண்டு பேட்டரிகள் உள்ளன. ஒன்று நிறுத்தியிருக்கும் போது ஒளியை உள்வாங்கி சார்ஜ் செய்துகொள்ளும். ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து சாலையில் ஓட ஆரம்பித்த பின்னர், அதிலுள்ள மற்றொரு பேட்டரி, முதல் பேட்டரிக்கு பதிலாக ஒளியை உள் வாங்கி மின்சாரமாக சேமிக்கும்.

இந்த இரண்டு பேட்டரி களையுமே எளிதில் அகற்றி பின் பொறுத்தலாம். ஏனென்றால் மழை மற்றும் பனி காலங்களில் சூரிய வெளிச்சம் போதிய அளவு இல்லாமல் இருக்கும். அப்போது பேட்டரிகளை மட்டும் தனியே எடுத்து மின்சாரம் மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்த பேட்டரிகள் சூரிய ஒளியில் முழுமையாக சார்ஜ் ஆக மூன்று முதல் நான்கு மணி நேரம் சார்ஜ் ஆகும். சார்ஜ் ஆகும் நேரத்தைவிட ஒரு மடங்கு அதிக நேரம் அதில் பயணிக்க முடியும். பேட்டரி ஸ்கூட்டர்களில் பயண நேரத்தில் சார்ஜ் செய்வது என்பது சாத்தியமில்லாத விஷயம். ஆனால் சூரிய ஆற்றல் ஸ்கூட்டர் பயணத்தின்போதும் சார்ஜ் ஆகும்.

நாங்கள் தயாரித்திருக்கும் சோலார் ஸ்கூட்டரில் ஒரு மணி நேரத்துக்கு 50 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் 250 கிலோ வரை அது எடை தாங்கும். காப்புரிமைக்காக விண்ணப் பித்துள்ளோம். விரைவில் அதற் கான ஒப்புதல் கிடைத்த பிறகு இதனை சந்தைப்படுத்தும் முடிவில் உள்ளோம்.

சந்தைப்படுத்துவதற்கு முன்பாக ஸ்கூட்டியின் தோற்றம், வேகம் போன்றவற்றில் சின்ன சின்ன மெருகேற்றல்களை செய்யவுள்ளோம். இது சந்தைக்கு வந்தால் ரூ.40 ஆயிரம் முதல் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுபோன்ற புதிய சிந்தனை களுக்கு ஊக்கமளிப்பதால் இது போன்ற புதிய புதிய கண்டு பிடிப்புகளை மாணவர்கள் ஆண்டு தோறும் உருவாக்கி வருவதாக கூறினார் இத்திட்டத்தின் ஒருங் கிணைப்பாளரும் கல்லூரியின் இயக்குநருமான வெங்கடேஸ் ராஜா கூறினார்.

manikandan.m@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in