

புதுடெல்லி: நிஸான் நிறுவனத்தின் தலைவர் மாஸ்மில்லியானோ மெசினா கூறியதாவது: அடுத்த 14-16 மாதங்களில் மூன்று புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த நிஸான் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் மூன்று மாடல்களில் ஒன்று ஏழு இருக்கைகள் கொண்ட `கிராவைட்' மாடலும் ஒன்றாகும். இது 2026 தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும். இதைத் தொடர்ந்து 2026 நடுப்பகுதி வாக்கில் நடுத்தர எஸ்யுவி மாடல் டெக்கானும், 2027 தொடக்கத்தில் ஏழு இருக்கை எஸ்யுவி மாடல் காரும் அறிமுகப்படுத்தப்படும்.
இதுபோன்ற புதிய அறிமுகங்களின் மூலம் நிஸான் நிறுவனம் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் விற்பனை வலையமைப்பை தற்போதைய 155 என்ற எண்ணிக்கையில் இருந்து 250-ஆக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
உலகளாவிய தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கார்கள் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஆழமான பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு மெசினா தெரிவித்தார்.