

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவராக பொருளாதார அறிஞர் அரவிந்த் பானகரியாநேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லார் மற்றும் இதர உயரதிகாரிகள் புதிய அமைப்பை பற்றி எடுத்து கூறினர். இந்த புதிய அமைப்பின் முழு நேர உறுப்பினர்களான பொருளாதார அறிஞர் பிபேக் தேப்ராய் மற்றும் முன்னாள் டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் விரைவில் பொறுபேற்பார்கள் என்று தெரிகிறது.
இந்த புதிய அமைப்பின் தலைவரான பிரதமர் மோடியை துணைத்தலைவர் பொறுப்பேற்றுக்கொண்ட பானகரியா விரைவில் சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது. 65 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட திட்டக் குழுவை கலைத்துவிட்டு இந்த புதிய அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.