

காகித அளவில் மட்டுமே செயல்பட்டு வரும் நிறுவனங் களுக்கு எதிராக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, தன்னுடைய நடவடிக் கையை தொடங்கி இருக்கிறது. கருப்பு பணத்துக்கு வடிகாலாகவோ அல்லது வரி ஏய்ப்புக்காகவோ பல நிறுவனங்கள் தொடங்கப் பட்டிருக்கின்றன. இதேபோல செயல் பட்டுவரும் 25 நிறுவனங்களுக்கு எதிராக முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது செபி.
செபியின் கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில் பல நிறுவனங்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் செயல்படவில்லை, அந்த நிறுவனங்களின் நிறுவனர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை என்று தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளித்துள்ள ஆவணங் களில் இருக்கும் புரமோட்டர்கள், உயர் அதிகாரிகள், ஆடிட்டர்கள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்ட விசாரணையில் சில சிறிய மற்றும் குறு நிறுவனங்கள் மீது செபி சந்தேகப்பட் டிருக்கிறது. அந்த நிறுவனங்கள் பங்குச்சந்தை வரி ஏய்ப்புக் காகவும் இதர அந்நியச் செலாவணி மோசடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்த பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பங்குச்சந்தைக்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் இதர தகவல்களை முறையான தேதியில் சமர்பித்துள்ளது. ஆனால் காளையின் பிடியில் சந்தை இருந்தாலும் குறிப்பிட்ட அந்த நிறுவனங்களின் பங்குகள் மிக அதிக அளவு உயர்ந்திருக்கின்றன.
பங்குகளின் ஏற்றத்துக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அடிப்படைத் தகவல்கள் மற்றும் நிதி நிலைமைக்கும் சம்பந்தம் இல்லாததால் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதை தொடர்ந்து செபி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையில் அந்த நிறுவனங்கள் காகித அளவில் மட்டுமே செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சிலர் ஒன்றாக சேர்ந்து இந்த நிறுவனங்களின் பங்குகளை செயற் கையாக உயர்த்தி இருக்கிறார்கள். பங்குகளின் விலை உயர்வை பயன்படுத்தி புரமோட்டர்கள் லாபத்தை எளிதாக அடைய எடுக்கப்பட்ட யுக்தி இதுவாகும்.
இதனால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தாலும் இந்த பங்குகளில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்களின் எதிர்காலம் கேள்வுக்குறிதான். மேலும் சில பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், செபிக்கு தேவையான விவரங் களை சமர்பித்திருப்பார்கள் ஆனால், திட்டத்தில் இல்லாத வேறு பிஸினஸை செயல்படுத்தி வருவார்கள். சில பிஸினஸ் விரிவாக்கத்தாக பங்குச்சந்தையில் பணம் திரட்டுவார்கள், ஆனால் திரட்டப்பட்ட தொகையை வேறு பிஸினஸோ அல்லது திட்டத்துக்கு செலவிடுவார்கள்.இதுபோல பலவகைகள் பட்டிய லிடப்பட்ட நிறுவனங்கள் தவறு செய்கிறார்கள்.
இதுபோன்ற நிறுவனங்கள் செபியின் கவனம் பெறக்கூடாது என்பதற்காக சிறிய தொகையை திரட்டுவார்கள். இப்போது இதுபோன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிமுறைகளை செபி கொண்டு வந்திருக்கிறது. மேலும் இது போன்ற நிறுவனங்களை கண்டு பிடிப்பதற்கான கண்காணிப்பையும் செபி அதிகரித்திருக்கிறது.