

பங்குச்சந்தைக்கு தொடர்ந்து உயர்ந்துவரும் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கி பொது பங்கு வெளியீடு (ஐபிஓ) பல நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியிட செபியிடம் விண்ணப்பித்திருக்கின்றன.
வீடியோகான் டிடீஹெச், ராஷ்ட்ரிய இஸ்பெட் நிகாம், டி.ஹெச்.ஆர்.பி. உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஐ.பி.ஓக்கு விண்ணப்பித்திருக்கின்றன. எஸ்.எம்.சி. குளோபல் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தொடர் பங்கு வெளி யீட்டுக்காக (எப்.பி.ஓ) செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது.
இதில் லவாசா, ஆட்லாப் என்டர்டெயின்மென்ட், ஆர்டெல் கம்யூனிகேஷன்ஸ், மான்டே கார்லோ பேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு செபி அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் இதுவரை பங்கு வெளியிடு செய்யவில்லை.