

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஓரிரு நாட்களில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாகும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் ஜம்மு காஷ்மீர் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜிஎஸ்டி கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. நிர்ணயித்த கால இலக்கை ஜம்மு காஷ்மீர் மாநி லத்தால் எட்ட முடியாத சூழலில் அம்மாநிலம் தவிர்த்து பிற மாநி லங்களில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது.
ஜூலை 6-ம் தேதி மறைமுக வரி விதிப்பான ஜிஎஸ்டி மசோதாவுக்கு மாநில சட்டப் பேரவை ஒப்புதல் அளிக்கும் என்று அம்மாநில நிதி அமைச்சர் ஹசீப் திராபு தெரி வித்திருந்தார். இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு அம்மாநில வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இத்தகைய எதிர்ப்பானது அரசியல் பின் னணியில் மேற்கொள்ளப்படுவ தாகும். ஜிஎஸ்டி அமல் செய்ய வில்லை எனில் அது அம்மாநில மக்களுக்குத்தான் பாதிப்பாக அமையும் என்றார் கோயல்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் ஜம்முவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து மறையும் அத் துடன் நிதி சுதந்திரமும் பறி போகும் என்று அம்மாநில வர்த் தகர்கள் கூறுகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற் பத்தி 1.5 சதவீத அளவுக்கு அதிக ரிக்கும் என கூறுவதை ஏற்க முடியாது என்று நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து என்று குறிப்பிட்ட கோயல், நிதி ஆயோக் உறுப்பினரான அவர் கூறியதாலேயே அது அனைவரின் கருத்தாக இருக்க முடியாது என்று சுட்டிக் காட்டினார். அதிக எண்ணிக்கையிலானோர் வரி செலுத்தும்போது வரி வருவாய் உயரும் என்று அவர் கூறினார்.
அமைச்சரவை செயலர் ஆய்வு
இந்த நிலையில் மத்திய அமைச் சரவைச் செயலர் பி.கே. சின்ஹா பல்வேறு துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பிற துறைகளின் செயலர்களின் கருத்துகளை அவர் கேட்டறிந்தார். ஜிஎஸ்டி அமலுக் குப் பிறகு நிலவும் சூழல்கள், எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர் கேட்டறிந்தார். வருவாய்த் துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா உள்ளிட்ட 20 துறைகளின் செயலர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துகளை அளித் தனர்.
மத்திய வரி வாரியத்தின் உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனை யின்போது உடனிருந்தனர். ஜிஎஸ்டி அமல் குறித்து சாலையோர தாபா முதல் உணவகங்கள், ரெஸ்டா ரெண்டுகள் மற்றும் மளிகைக் கடைகள் வரவேற்றுள்ளதாக வரு வாய்த்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் தெரிவித்தனர்.