

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக அஜய் தியாகி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 58 வயதாகும் தியாகி இதற்கு முன்பு நிதி அமைச்சகத்தில் பணியாற்றி வந்தார்.
கமாடிட்டி வர்த்தகத்துக்கான ஒழுங்குமுறை ஆணையமான ஃபார்வர்டு மார்க்கெட் கமிஷன் ஆணையத்தை செபியுடன் கடந்த ஆண்டு இணைத்ததில் இவரது பங்களிப்பு மிகவும் அதிகம்.
நிறுவன கடன் பத்திர சந்தையில் சில சீர்திருத்தங்களை இவர்மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது