இயல்பு நிலைக்கு திரும்புகிறது எஸ்எம்இ துறை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கருத்து

இயல்பு நிலைக்கு திரும்புகிறது எஸ்எம்இ துறை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கருத்து
Updated on
1 min read

பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை பாதிப்படைந்தன. ஆனால் ஆரம்ப கால சிக்கலில் இருந்து இந்த நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதாக மத்திய சிறு, குறுந்தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியிருக்கிறார்.

2016-ம் ஆண்டில் தனது துறை குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது இதனை தெரிவித் தார். பண மதிப்பு நீக்கம் செய் யப்பட்ட சமயத்தில் சிறு நிறு வனங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டது உண்மைதான். ஆனால் இப்போது நிலைமை சீரடைந் துள்ளது.

ரூ.1.80 லட்சம் கோடி கடன்

தொழிலாளர்களுக்கு சம் பளம் கொடுக்கப்படும் சூழ்நிலை மேம்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பத் தொடங்கி யுள்ளனர்.

வங்கிகள் மூலம் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் நடப்பாண் டில் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அரசு திட்டமிட் டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 3.5 பயனாளிகளுக்கு ரூ.1.22 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சிறு தொழில்முனைவோர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ,10 லட்சம் வரை கடன் கொடுக்கப்படுகிறது.

காதி பொருட்களின் விற் பனையை உயர்த்த அரசு முயற்சித்து வருகிறது. சர்வதேச சந்தை, பிரான்ஸைசி முறையில் கடைகளை திறத்தல் ஆகியன கூறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி அமலாகும் பட்சத்தில் நாடு முழுவதும் இருக்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in