

விஸ்தாரா விமான நிறுவனத்தின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் டாடா சன்ஸ் நிறுவனம் வசமும் 49 சதவீத பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வசமும் உள்ளன.
ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விளம்பர தூதராக தீபிகா படுகோன் நியமிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விஸ்தாரா தனது செயல்பாட்டைத் தொடங்கியது. தீபிகா படுகோனின் ஒப்பந்த காலம், அவருக்கு அளிக்கப்படும் தொகை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.