இவரை தெரியுமா?- விஷால் கம்பானி

இவரை தெரியுமா?- விஷால் கம்பானி
Updated on
1 min read

ஜேஎம் பைனான்ஸியல் நிறு வனத்தின் நிர்வாக இயக்கு நராக நியமிக்கப்பட்டிருக் கிறார்.

இதற்கு முன் இதே நிறுவனத்தில் அன்றாட அலுவல் பணிகள் ஏதும் இல்லாத இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

ஜேஎம் பைனான்சியல் நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தில் ஈக்விட்டி மார்க்கெட் கேபிடல் குழுமத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

ஜேஎம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

மும்பை பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பிரிவில் முதுகலை பட்டமும் லண்டன் பிஸினஸ் பள்ளியில் பைனான்ஸ் பிரிவில் எம்எஸ் பட்டமும் பெற்றுள்ளார்.

ஜேஎம் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார்.

இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங், ஈக்விட்டி மார்கெட், ரியல் எஸ்டேட் பண்ட் மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in