மானிய விலை எல்பிஜி சிலிண்டர் உயர்வு

மானிய விலை எல்பிஜி சிலிண்டர் உயர்வு
Updated on
1 min read

மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1.93 உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மானிய சுமையைக் குறைக்கும் பொருட்டு சமீபத்தில் அரசு இரண்டாவது முறையாக இந்த விலை ஏற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த விலை ஏற்றத்துக்கு பிறகு மானிய விலையிலான 14.2 கிலோ சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.423.09 ஆக இருக்கும். இதற்கு முன்பு ரூ.421.16 க்கு எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்தன.

இதற்கு முன்பு ஜூலை 1 ஆம் தேதி 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.1.98 உயர்த்தப்பட்டது. ஒரு மாதத்துக்குள் மீண்டும் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

டீசலுக்கான மானிய சுமையிலிருந்து அரசு வெளிவந்த வழியை பின்பற்றி மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு மானிய சுமையிலிருந்து வெளியேற சமீபத்தில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாதம் 2 ரூபாய் அளவில் சமையல் எரிவாயுவுக்கான விலையை உயர்த்துவது என்கிற முடிவை எடுத்துள்ளது.

மண்ணெண்ணெய்க்கான விலையில் மாதம் 25 காசுகள் வீதம் 10 மாதங்களுக்கு உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி இரண்டாவது முறையாக நேற்று மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது.

மானியம் அல்லாத சமையல் எரிவாயுவின் தற்போதைய டெல்லி விலை ரூ.487 ஆக உள்ளது. இதற்கு முன்பு ரூ.537.50 ஆக இருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in