பெரிய நிறுவனங்கள் டிவிடெண்ட் கொள்கையை வகுக்க வேண்டும்: செபி தலைவர் சின்ஹா வலியுறுத்தல்

பெரிய நிறுவனங்கள் டிவிடெண்ட் கொள்கையை வகுக்க வேண்டும்: செபி தலைவர் சின்ஹா வலியுறுத்தல்

Published on

பல பெரிய நிறுவனங்கள் நிதி மூலதனத்தை தேக்கி வைத் துள்ளன. இதற்குப் பதிலாக பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கும் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் சின்ஹா வலியுறுத்தினார்.

பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களின் டிவிடெண்ட் டிஸ்ட்ரிபூஷன் கொள்கை மற்றும் பணப் பதுக்கல் காரணமாக நிதி மூலதனம் ஊக்கம் பெறவில்லை’ என்று அவர் குறிப்பிட்டார்.

நிறுவனங்கள் தங்களது லாபத்திலிருந்து பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவதை செபி உறுதி செய்ய உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் பொருள் நிறுவனத்தின் மொத்த இருப்பையும் கொடுக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் சின்ஹா கூறினார்.

முதலீட்டாளர்கள் முழு தொகை யையும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் நிறுவனத்துக்கு என்று டிவிடெண்ட் கொள்கை இருக்க வேண்டும். லாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு கொடுக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இதற்கான கண்காணிப்பு அமைப்பு பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளது. நிறுவனங்களோடு பேசி இதற்கான முறை வகுக்கப்படும் என சின்ஹா தெரிவித்தார்.

இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ போன்ற முன்னணி நிறுவ னங்கள் அதிக அளவிலான நிதி மூலதனத்தை தேக்கி வைத் துள்ளன. இந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண் டை வழங்க வேண்டும். அல்லது அந்த நிதிமூலதனத்தை தொழி லுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் வந்துள் ளன என்று தெரிவித்த அவர் டிவிடெண்ட் வழங்குவதில் சிறந்து விளக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் திட்டமும் இருப் பதாக தெரிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பேசிய சின்ஹா, ’’புதிய கட்டுப்பாடுகள் எதையும் கொண்டுவரவில்லை. ஏற்கெனவே இருக்கும் வழிகாட்டுதல்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார் சின்ஹா. –பி.டி.ஐ.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in