பிஎச்இஎல் நிறுவனத்துக்கு ரூ. 7,900 கோடிக்கு ஆர்டர்

பிஎச்இஎல் நிறுவனத்துக்கு ரூ. 7,900 கோடிக்கு ஆர்டர்
Updated on
1 min read

மின்னுற்பத்தி கருவிகளைத் தயாரிக்கும் பிஎச்இஎல் நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் அனல் மின் நிலையத்துக்குத் தேவை யான கருவிகளைத் தயாரித்து அளிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. 1,980 மெகாவாட் திறன் கொண்ட இந்த அனல் மின் நிலைய கருவிகளை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தப் பணியின் மதிப்பு ரூ. 7,900 கோடியாகும்.

ஒவ்வொன்றும் 660 மெகாவாட் திறன் கொண்டதாக மூன்று அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. என்டிபிசி அமைக்க உள்ள இந்த பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரலில் வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்து கொண்டன. வடக்கு கரண்புரா பகுதியில் அமையவுள்ள இந்த திட்டப் பணிக்கான ஒப்பந்தப் புள்ளி களை பிஎச்இஎல் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வடிவமைத்தல், தயாரித்தல், விநியோகித்தல், நிறுவுதல், சோதித்து ஒப்படைத்தல் ஆகிய பணிகளை பிஎச்இஎல் நிறுவனம் மேற்கொள்ளும். இந்த ஆலைக்கான உதிரி பாகங்கள் இந்நிறுவனத்தின் திருச்சி, ஹரித்வார், போபால், ராணிப்பேட்டை, ஹைதராபாத், ஜான்சி மற்றும் பெங்களூரில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in