சஹாரா லைசென்ஸ் கோரிக்கை: ‘செபி’ நிராகரிப்பு

சஹாரா லைசென்ஸ் கோரிக்கை: ‘செபி’ நிராகரிப்பு
Updated on
1 min read

பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) சஹாரா குழுமம் லைசென்ஸ் கோரி விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. சஹாரா குழுமத்தின் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ரத்து செய்த ஃபோர்ட்போலியோ நிர்வாக லைசென்ஸை திரும்ப அளிக்குமாறு செபி-யிடம் கோரி யிருந்தது. ஆனால் அத்தகைய பணி களை நிறைவேற்றும் தகுதி யை சஹாரா நிறுவனம் இழந்து விட்டதாக செபி தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் செபி பிறப்பித்த உத்தரவில் சஹாரா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் (ஏஎம்சி) ஃபோர்ட்போலியோ மேனேஜர் செயல்பாடுகளை ரத்து செய்வதாக அறிவித்தது.

இது தொடர்பாக லைசென்ஸ் ரத்து செய்ததை மறு பரிசீலனை செய்யுமாறு சஹாரா குழும நிறுவனம் விடுத்த கோரிக்கையை செபி நிராகரித்துவிட்டது. இது குறித்து டிசம்பர் 30-ம் தேதியிட்ட கடிதத்தில் சஹாரா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்குவதா வேண்டாமா என்பதில் எவ்வித தயக்கமும் செபிக்கு இருந்ததில்லை. இத்தகைய பணிகளை நிறை வேற்றும் தகுதியை சஹாரா குழும நிறுவனம் இழந்துவிட்டது. மேலும் இந்நிறுவனத்தில் சஹாரா நிறுவனர் சுப்ரதோ ராய்க்கு கணிசமாக பங்குள்ளது. எனவே லைசென்ஸை திரும்ப அளிக்க முடியாது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிபடைத்த உரிய நபர் என்ற விதிமுறையை நிறைவேற்றுவதில் செபி சில அடிப்படை வழிமுறை களைப் பின்பற்றுகிறது. இந்த அடிப்படை வழிமுறைகளை சஹாரா நிறுவனர் சுப்ரதோ ராய் பின்பற்றவில்லை.

எனவே முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு லைசென்ஸை புதுப்பிக்க முடியாது என செபி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in