பட்ஜெட்டில் வரிச் சலுகைகளை எதிர்பார்க்கும் செபி

பட்ஜெட்டில் வரிச் சலுகைகளை எதிர்பார்க்கும் செபி
Updated on
1 min read

பங்குச்சந்தை தொடர்பான முதலீடுகளுக்கு மத்திய பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என `செபி’ கோரிக்கை விடுத்திருக்கிறது.

நிதி அமைச்சகத்துக்கு அளித்த பட்ஜெட் பரிந்துரைகளில் சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறது.

பங்கு பரிவர்த்தனை வரியை குறைக்க `செபி’ பரிந்துரை செய்திருக்கிறது. தற்போது பங்கு பரிவர்த்தனை வரி 0.017% முதல் 0.125 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. மேலும் இஎல்எஸ்எஸ் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகையை 1.5 லட்ச ரூபாயில் இருந்து 2 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் `செபி’ வைத்திருக்கிறது. இதன் மூலம் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என `செபி’ தெரிவித்திருக்கிறது.

இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கமும் (ஆம்பி) நிதி அமைச்சகத்துக்கு சில கோரிக்கைகளை வைத்திருக்கிறது. அதில் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களையும் 80சிசிசி பிரிவின் கீழ் இணைத்து அதற்கு வரிச்சலுகை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறது.

தற்போது 80சிசிசி பிரிவின் கீழ் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட்களுக்கு மட்டுமே வரிச்சலுகை கிடைக்கிறது. அதுவும் ஒரு நிதி ஆண்டுக்கு 1.5 லட்ச ரூபாய் வரை வரிச்சலுகை பெறமுடியும்.

தவிர ராஜிவ் காந்தி ஈக்விட்டி திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரிச்சலுகையை அனைத்து பங்குச்சந்தை பண்ட் முதலீட்டாளர்களுக்கும் வழங்கலாம் என ஆம்பி பரிந்துரை செய்திருக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டு ராஜிவ் காந்தி ஈக்விட்டி (ஆர்ஜிஇஎஸ்எஸ்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய்க்கு கீழ் வருமானம் இருப்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in