2025-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி டாலர்: மார்கன் ஸ்டான்லி கணிப்பு

2025-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி டாலர்: மார்கன் ஸ்டான்லி கணிப்பு
Updated on
1 min read

இந்தியாவில் இளைஞர்களின் எண் ணிக்கை அதிகமாக இருப்பது, மத்திய அரசின் கொள்கைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வரும் 2025-ம் ஆண்டில் இந்திய பொருளா தாரத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி டாலராக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கணித்திருக்கிறது.

தற்போது இந்திய பொருளா தாரத்தின் மதிப்பு 2.2 லட்சம் கோடி யாக இருக்கிறது. சர்வதேச அளவில் 7வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 1,700 கோடி டாலராக இருக்கிறது. ஆனால் சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளைவிட இந்தியாவின் தனிநபர் வருமானம் குறைவாகும்.

வரும் 2025-ம் ஆண்டு இந்தியா வின் தனிநபர் வருமானம் 125% உயர்ந்து 3,650 டாலராக இருக்கும் என்று மார்கன் ஸ்டான்லி கணித்திருக்கிறது. தற்போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை 40 கோடி என்னும் அளவில் இருக்கிறது. சர்வதேச அளவில் இந்த எண்ணிக்கை எங்கும் இல்லை.இந்த மக்கள் தொகை இந்தியாவை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆனால் அதே சமயத்தில் இந்த மக்கள் தொகை மட்டுமே பொருளா தாரத்தை உயர்த்துவதற்கு போது மானதாக இருக்காது. சர்வதேச சூழலுக்கு ஏற்ப இவர்கள் போதுமான திறன்களை பெற்றிருக்க வேண்டும். அடுத்த சவால் இவர் களுக்கு சரியான வேலை வாய்ப்பு களை உருவாக்குவதில் இருக் கிறது. இளைஞர்களை திறன் மிக்க வர்களாகவும், அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி யும் கொடுக்க வேண்டும் என மார்கன் ஸ்டான்லி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in