வாடிக்கையாளர்களுக்கு மொபைல் வங்கிச் சேவை: மார்ச் 31 வரை வங்கிகளுக்கு கால அவகாசம்

வாடிக்கையாளர்களுக்கு மொபைல் வங்கிச் சேவை: மார்ச் 31 வரை வங்கிகளுக்கு கால அவகாசம்
Updated on
1 min read

அனைத்து வங்கிகளும் இம்மாத இறுதிக்குள் (மார்ச் 31) மொபைல் வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும். அந்த அளவுக்கு தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து வங்கிகளும் மொபைல் வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளது. இதற்கு இம்மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள நிலவரத்தின் படி சேமிப்புக் கணக்கு வைத் திருப்பவர்களில் 65 சதவீதம் பேரது மொபைல் எண் வங்கி வசம் உள்ளது. இதில் 50 சதவீதம் மட்டுமே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக உள் ளது. மொபைல் சேவை 65 சதவீ தம் உள்ள போதிலும் இதில் 20 சதவீத கணக்குகளே மொபைல் வங்கிச் சேவையைப் பயன்படுத் தும் நிலையில் உள்ளன. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் வங்கி யில் உள்ள சேமிப்புக் கணக்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் வங்கிகள் இம்மாதம் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

யுனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மற்றும் பாரத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி (பீம்) உள்ளிட்ட பண பரிவர்த் தனை செயலியைப் பயன்படுத்து வதும் மொபைல் வங்கிச் சேவை தான் என்று தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இத்தகைய சேவையைப் பயன் படுத்தும் வாடிக்கையாளர் களுக்கு மொபைல் வங்கிச் சேவை கிடைப்பதற்கான நடவடிக் கையை இம்மாத இறுதிக்குள் எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளதாக அருணா சுந்தரராஜன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in