சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க எல்பிஜி-யில் 20% டிஎம்இ காஸ் கலக்க திட்டம்

தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த தமிழர் தலைமையிலான குழு
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க எல்பிஜி-யில் 20% டிஎம்இ காஸ் கலக்க திட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: சமையல் காஸ் தட்​டுப்​பாட்டை போக்க எல்​பிஜி காஸில் 20 சதவீதம் டிஎம்இ காஸை கலக்க மத்​திய அரசு திட்​ட​மிட்டுள்​ளது.

இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் தேவை​யில் 85 சதவீதம் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. இதே​போல நாட்​டின் எல்​பிஜி சமையல் காஸ் 60 சதவீதம் இறக்​குமதி செய்யப்படு​கிறது. அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், சமையல் காஸுக்கு கடுமை​யான தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது.

சமையல் காஸ் தட்​டுப்​பாட்​டுக்கு தீர்வு காண உள்​நாட்​டில் எல்​பிஜி உற்​பத்தி அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. மேலும் அமெரிக்​கா, அங்கோலா உள்​ளிட்ட நாடு​களில் இருந்து எல்​பிஜி காஸ் இறக்குமதி செய்​யப்​பட்டு வரு​கிறது. ஏற்​கெனவே நாடு முழு​வதும் பெட்ரோலில் 20 சதவீதம் அளவுக்கு எத்​த​னால் கலப்​பது கட்டாயமாக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் கச்சா எண்​ணெய் இறக்​குமதி கணிச​மாக குறைந்​து, பெட்​ரோல் தட்​டுப்​பாடு பிரச்சினைக்​கும் எளிய முறை​யில் தீர்வு காணப்​பட்டு உள்​ளது.

இதே​போல எல்​பிஜி சமையல் காஸில் 20 சதவீதம் டிஎம்இ காஸை கலக்க மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. இதன் ​மூலம் எல்​பிஜி இறக்​கும​தியை கணிச​மாக குறைக்க முடி​யும் என்று பெட்ரோலியத் துறை தெரி​வித்​துள்​ளது. டைமெத்​தைல் ஈதர் (டிஎம்இ) என்​பது ஒரு செயற்கை எரி​வாயு. இயற்கை எரி​வா​யு, நிலக்​கரி வாயு​வாக்​கம் ஆகிய​வற்​றின் மூலம் டிஎம்இ காஸ் உற்பத்தி செய்​யப்​படு​கிறது.

இது தூய்​மை​யான எரி​வாயு ஆகும். எல்​பிஜி உடன் ஒப்​பிடும்​போது டிஎம்இ காஸ் எரி​யும்​போது புகை, நைட்​ரஜன் ஆக்​ஸைடு, கந்தக ஆக்​ஸைடு ஆகியவை மிகக் குறை​வாக வெளி​யேறும். மும்பையை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் நியூ ஏரா கிளீன்​டெக் சொல்​யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறு​வனம் நிலக்கரி வாயு​வாக்​கம் மூலம் டிஎம்இ காஸை உற்​பத்தி செய்து வரு​கிறது.

இதே​போல மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த மத்​திய அரசின் சிஎஸ்​ஐஆர்- என்​சிஎல் நிறு​வனம், மெத்​த​னாலில் இருந்து டிஎம்இ காஸை உற்​பத்தி செய்​யும் தொழில்​நுட்​பத்​தை கண்​டு​பிடித்​து உள்​ளது.

தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த தமிழர் தலைமையிலான குழு:

மகாராஷ்டிராவின் புனே நகரில் மத்​திய அரசின் சிஎஸ்ஐஆர் - என்​சிஎல் நிறு​வனம் செயல்​படு​கிறது. அங்கு முதன்மை விஞ்​ஞானி​யாக உள்ள தமிழகத்​தின் பவானி பகு​தியை சேர்ந்த ராஜா திரு​மலைச்​சாமி தலை​மையி​லான குழு மெத்தனாலில் இருந்து டிஎம்இ காஸை தயாரிக்​கும் தொழில்​ நுட்பத்தை கண்​டறிந்து உள்ளது.

இதுகுறித்து ராஜா திரு​மலைச் சாமி கூறும்​போது, “மெத்​த​னாலில் இருந்து டிஎம்இ காஸை தயாரிப்​பது தொடர்​பாக 5 காப்புரிமைகளை பெற்​றிருக்​கிறோம். பின்​லாந்​து, கானா உள்ளிட்ட 4 நாடு​கள் எங்​களிடம் தொழில்​நுட்ப உதவியை கோரி உள்​ளன” என்று தெரிவித்தார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க எல்பிஜி-யில் 20% டிஎம்இ காஸ் கலக்க திட்டம்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in