ஐஓபி நஷ்டம் ரூ.1,450 கோடி

ஐஓபி நஷ்டம் ரூ.1,450 கோடி
Updated on
1 min read

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜூன் காலாண்டில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. ரூ.1,450 கோடி அளவுக்கு நஷ்டம் அடைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.14.76 கோடிக்கு லாபம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் மொத்த வாராக்கடன் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக அதிகரித்து 20.48 சதவீதமாக இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு 17.4 சதவீதமாக மொத்த வாராக்கடன் இருந்தது. கடந்த 13 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கி ஒன்றின் மொத்த வாராக்கடன் அளவு அதிகரித்திருப்பது இப்போதுதான். கடந்த 2002-ம் ஆண்டு தேனா வங்கியில் 21.82 சதவீத மொத்த வாராக்கடன் இருந்தது. ஐடிபிஐ வங்கியில் 2013 டிசம்பர் காலாண்டில் 29.9 சதவீதமாக இருந்தது.

நிகர வாராக்கடன் 13.97 சதவீதமாக இருக்கிறது. முந்தைய காலாண்டில் 11.9 சதவீதமாக இருந்தது. வாராக்கடனுக்காக ரூ.2,137 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வங்கியின் மொத்த வருமானம் 12 சதவீதம் சரிந்து ரூ.5,868 கோடியாக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.94 சதவீதம் சரிந்து 26.45 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in