மொபைல், இணையம் வழியாக விழிப்புணர்வு: செபி

மொபைல், இணையம் வழியாக விழிப்புணர்வு: செபி
Updated on
1 min read

சிறு முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களைப் பாதுகாக்கவும் பல நடவடிக்கைகளை செபி எடுத்துவருகிறது. இந்த வரிசையில் தொழிற்துறை கூட்டமைப்புகளுடன் சேர்ந்து, மொபைல் போன் மற்றும் இணையம் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொழில்துறை கூட்டமைப் புகள் அல்லாமல், பங்குச்சந் தைகள் மற்றும் டெபாசிட்டரி மூலமாக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறது செபி. கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு ஊடகங்கள் மூலமாக முதலீட்டாளர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது. மேலும் 13 மொழிகளில், நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை சென்றடையும் திட்டமும் வைத்திருக்கிறது.

இதுபோன்ற முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கு சந்தை பற்றிய விவரம் கிடைப்பது மட்டுமல்லாமல் புதிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித் திருப்பதாக செபி தெரிவித்தி ருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in