கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துங்கள்: ரிசர்வ் வங்கிக்கு ஐஎம்எப் பரிந்துரை

கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துங்கள்: ரிசர்வ் வங்கிக்கு ஐஎம்எப் பரிந்துரை
Updated on
2 min read

நாட்டில் அதிகரித்து வரும் பொருள்களுக்கான பணவீக் கத்தைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டியை அதிகரிப்பது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்க வேண்டும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) பரிந்துரை செய்துள்ளது.

இப்போதைய சூழலில் நுகர் பொருள் பணவீக்க அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தும் யோசனையை ரிசர்வ் வங்கி பின்பற்றலாம் என்று ஐஎம்எப் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`இந்தியாவில் உணவுப் பணவீக்கம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்களை ஐஎம்எப் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தியாவில் உணவுப் பொருள் மற்றும் எரிபொருள்கள் விலை கடந்த சில ஆண்டுகளாகவே உயர்ந்து காணப்படுகிறது. இப்போதைய உயர் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பணப்புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்த வேண்டும். இந்த கட்டுப்பாட்டை ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீட்டிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடாது என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்து வதற்காக கடந்த நான்கு நிதிக் கொள்கையிலும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வில்லை. வட்டியைக் குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்த போதிலும் அவர் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆனால் வளர்ச்சியை எட்ட வட்டிக் குறைப்பு தேவை என நிதி அமைச்சகம் கூறி வருகிறது.

நிதிக் கொள்கை குறித்த பிரச்சினைகளை வரையறுக்க புதிய கட்டமைப்பை உருவாக்குவதில் ரிசர்வ் வங்கியோடு மத்திய நிதி அமைச்சகமும் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் உர்ஜித் படேல் குழு அளித்த பரிந்துரையை செயல்படுத் துவதிலும் தீவிரம் காட்டப்படுகிறது.

கடந்த ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மிகவும் சிக்கலான பொருளாதார நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த புதிய நிதிக் கொள்கை வகுக்க வேண்டியது அவசிய மாகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கான வழிகாட்டுதலை உருவாக்க ரிசர்வ் வங்கியோடு இணைந்து அரசும் செயல்படும் என்று கூறியிருந்தார்.

உர்ஜித் படேல் குழுவானது தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி சில்லறை பண வீக்கத்தை 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் 8 சதவீதத்துக்குள்ளும் 2016 ஜனவரி யில் 6 சதவீதத்துக்குள்ளும் கட்டுப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.

தற்போதைய சூழலில் கடந்த 5 ஆண்டுகளாக பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்தே காணப் பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி யை அதிகரிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் ஆய் வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் 3.74 சதவீதமாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இது மிகவும் குறைவாகும்.

பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்தும் விதமாக நிதிக் கொள்கை இருக்க வேண்டும். மாறாக ஒரே நிலையில் நீண்ட காலம் இருப்பது பலனளிக்காது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in