பி - நோட் முதலீடுகளுக்கு கடுமையான விதிமுறைகள்

பி - நோட் முதலீடுகளுக்கு கடுமையான விதிமுறைகள்
Updated on
1 min read

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் பி-நோட் முதலீடுகளுக்கான விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கிறது செபி. முறையற்ற வழியில் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை இனி இந்திய டெரிவேட்டிவ் சந்தையில் முதலீடு செய்ய தடைவிதித்திருக்கிறது செபி. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் செபி தெரிவித்திருக்கிறது.

வெளிநாட்டில் இருக்கும் பெரிய முதலீட்டாளர்கள் (ஹெச்.என்.ஐ.) ஹெட்ஜ் ஃபண்ட்கள் உள்ளிட்டவை பி-நோட் வழியாக இந்திய சந்தையில் முதலீடு செய்கிறார்கள். இந்த வழியாக முதலீடு செய்யும்போது அவர்கள் செபியிடம் அனுமதி வாங்க தேவை இல்லை. சில மாதங்களுகு முன்பு பாரின் போர்ட்ஃபோலியோ இன்வெஸ்டர் என்ற புதிய பிரிவை உருவாக்கியது செபி. அதன் ஒரு பகுதியாக இந்த விதிமுறையை செபி கொண்டுவந்திருக்கிறது.

ஆனால் இதற்கான வரைவினில் அதிக ரிஸ்க் எடுக்கும் மூன்றாம் பிரிவு முதலீட்டாளர்களை மட்டுமே தடை செய்யப்போவதாக இருந்தது. ஆனால் தற்போது நடைமுறைக்கு வந்த விதிகளின்படி இரண்டாம் பகுதியில் இருக்கு நடுத்தர ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களையும் பி.நோட் மூலமாக முதலீடு செய்வதை தடுத்துள்ளது செபி.

முதல் பிரிவில் குறைந்த ரிஸ்க் எடுக்க கூடிய, அரசாங்கம் அது தொடர்பான முதலீட்டாளர்களும், இரண்டாம் பிரிவில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஃபண்ட்கள், பென்ஷன் ஃபண்ட்கள், பல்கலைகழக ஃபண்ட்கள் ஆகியவை இருக்கும். இந்த முதல் இரண்டு பிரிவில் வராத அனைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் மூன்றாம் பிரிவில் வகைபடுத்தியது செபி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in