

நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்இ பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) வெளியிடப்படும் என்றும், ஐபிஓ வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஓ வெளியிடுவதற்காக செபியிடம் விண்ணப்பித்திருக்கிறோம். இதுவரை எந்த தகவலும் இல்லை. இதில் எந்த பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இன்னும் 60-70 நாட்களில் அனுமதி கிடைத்து விடும். பட்டியலிடுவதற்காக செபி யின் விதிமுறைகளை நாங்கள் பூர்த்தி செய்திருக்கிறோம் என்று இந்த நடைமுறையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி ஒருவர் கூறினார்.
பங்குச்சந்தை நிறுவனங்கள் தங்களுடைய எக்ஸ்சேஞ்சிலே பட்டியலிட முடியாது என்று செபி அறிவித்துவிட்டது. அந்த விதிமுறைகளை பிஎஸ்இ ஏற்றுக்கொண்டிருக்கிறது. அனுமதி கிடைத்த பிறகு, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் ஐபிஓ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
141 வருடமாக செயல்பட்டு வரும் இந்த எக்ஸ்சேஞ்சில் 9,000 பங்குதாரர்கள் இருக்கிறார்கள். எஸ்பிஐ, எல்ஐசி, பஜாஜ் ஹோல்டிங்ஸ் ஆகியவை முக்கியமான இந்திய பங்குதாரர்கள் ஆவார்கள். சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-ம் பிஎஸ்இயில் முதலீடு செய்திருக் கிறது. இந்த ஐபிஓவில் முழுமை யாக தன்ன்னுடைய பங்குகளை விற்க அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் பங்குச் சந்தை ஐபிஓ வெளியிட செபி அனுமதி வழங்கியது.