மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபட செபி அனுமதி?

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபட செபி அனுமதி?
Updated on
1 min read

கமாடிட்டி சந்தையை பலப்படுத்த செபி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களை கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்குவது குறித்தும் செபி பரிசீலனை செய்து வருகிறது. ரிசர்வ் வங்கியிடமும் இது குறித்து செபி விவாதித்து இருக்கிறது. மேலும் இதர நிறுவன முதலீட்டாளர்களான வங்கிகள், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்த பரிசீலனையிலும் செபி இருக்கிறது.

நிறுவன முதலீட்டாளர்களை பொறுத்தவரை மியூச்சுவல் பண்ட்கள் கமாடிட்டி சந்தையில் வர்த்தகத்தை தொடங்குவார்கள் என செபி தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்தார். மேலும் ஒரு மாதத்துக்குள் இவை நடைமுறைப்படுத்தப்படும். வங்கி கள், அந்நிய முதலீட் டாளர்களை அனுமதிப்பது குறித்து ரிசர்வ் வங்கியிடம் பேசி வருகிறோம். வங்கிகள் கமாடிட்டி சார்ந்த தொழில்களுக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறது என்பது குறித்த தகவல்களை கேட்டிருக்கிறோம். வங்கிகள் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபடு வதில் ரிசர்வ் வங்கி என்ன முடிவெடுக்கும் என்பது தெரிய வில்லை என்றும் யூ.கே.சின்ஹா கூறினார்.

கமாடிட்டி சந்தையை நிர் வகிக்க பார்வேர்ட் மார்க்கெட்டிங் கமிஷன் என்னும் ஒழுங்கு முறை ஆணையம் செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த ஆணையத்தை மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செபியு டன் இணைத்தது. அப்போது முதல் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட் மற்றும் கமாடிட்டி சந்தை ஆகியவற்றை செபி நெறிமுறைப்படுத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in