

பங்குச் சந்தை சார்ந்த பண்ட்கள் மற்றும் குறுகிய கால கடன் பண்ட்களில் அதிக முதலீடு வருவதால் இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு கடந்த ஜூன் மாதத்தில் ரூ.14.41 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட்கள் கையாளும் சொத்துமதிப்பு முதல் முறையாக ரூ.14 லட்சம் கோடியைத் தொட்டிருக்கிறது. முன்னதாக ரூ.13.53 லட்சம் கோடியை எட்டியது அதிகமான அளவாகும்.
பங்குச் சந்தை சார்ந்த பண்ட்களின் சொத்து மதிப்பு 7.59 சதவீதம் உயர்ந்து ரூ.4.74 லட்சம் கோடியாகவும் குறுகிய கால கடன் பண்ட்களின் சொத்து மதிப்பு ரூ.1.60 லட்சம் கோடியா கவும், லிக்விட் பண்ட்களின் சொத்து மதிப்பு ரூ. 3.42 லட்சம் கோடியாவும் உள்ளது.
சொத்துகளைக் கையாளு வதில் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் முதல் இடத்திலும், ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் 2-வது, 3-வது இடத்திலும் உள்ளது.