

நாடு முழுவதும் 60 வரி செலுத் தும் மையங்களை அமைக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. ‘ஆய்கர் சேவா கேந்த்ராஸ்’ என்கிற பெயரில் இந்த மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் வருமான வரி செலுத்தும் பிரிவினருக்கும் நெருக்கமாகவும், அதிகபட்சமாக நபர்களையும் சென்றடைய முடியும்.
இந்த மையங்கள் வருமான வரி செலுத்தும் பிரிவினரின் தனிப்பட்ட மற்றும் தொழில் தொடர்பான உதவிகளை மேற்கொள்ளும், நிரந்தர கணக்கு எண் (பான்) பெறுவது முதல் வருமான வரி செலுத்துவது வரையிலும் உதவி செய்யும். வருமான வரிக்கு தொடர்பில்லாத விவகாரங்கள் தவிர அனைத்தும் வகையிலும் உதவி செய்யும்.
இது தொடர்பாக மத்திய நேரடி வரி ஆணையம் அதிகாரபூர்வமாக தயாரித்துள்ள முதல்கட்ட வரை வில் நாடு முழுவதும் தொடங்க உள்ள 60 மையங்கள் அடையாளப் படுத்த கண்டறியப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக அசாம் மாநிலம் கோல்பாரா மற்றும் மொரிகான் பகுதியிலும், மேற்கு வங்கத்தில் சிலிகுரி மற்றும் ஹால்தியா, தமிழ்நாட்டின் தர்மபுரி, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ், உத்தர பிரதேசத்தில் ஹார்தோய், லக்மிபூர் கெரி, குஜராத்தின் தகோட் மற்றும் போர்பந்தர், மத்திய பிரதேசத்தின் நிமுச் மற்றும் மந்தசோர் ஒடிசாவில் ஜாய்பூர் மற்று பூரி, ஹரியாணாவில் ரிவாரி மற்றும் சோனிபட் நகரங்களிலும் அமைய உள்ளது.
இந்த மையங்கள் 2016-17 நிதி யாண்டுக்குள் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த மையங் கள் தொடங்கப்பட்டுவிடும். ஒரு மாநிலத்தில் பல நகரங்களிலும் இந்த மையம் தொடங்கப்படும். மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் (சிபிடிடி) மற்றும் வருமான வரித்துறையின் முன்னுரிமைபடி இந்த இடங்கள் தொடங்கப்படும் என்று வரித்துறையின் மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த முயற்சியின் மூலம் நாட்டின் பெரும்பான்மையான மக்களை `பான்’ எண்ணில் ஒருங்கிணைக்க முடியும். மேலும் வரிதொடர்பான பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும், பொதுமக் களை வருமான வரி வரம்புக்குள் கொண்டுவரவும் முடியும். மேலும் பொதுமக்கள் வருமான வரி தொடர்பான விவகாரங்களுக்காக வீண் அலைச்சலைத் தவிர்க்க முடியும்.
இந்த மையங்களை விரைந்து தொடங்குவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் தங்களது கள அலுவலகங்களை வலி யுறுத்தி உள்ளது. வரி தொடர்பான அனைத்து விவகாரங்களும் வரி செலுத்துபவர்களுக்கு இலவசமாக இந்த மையம் செய்து கொடுக்கும். தற்போது சில முக்கிய நகரங்களில் மட்டும் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.