

சிறு நகரங்களில் இருந்து மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட்களில் முக்கியமான 15 நகரங்களில் இருந்துதான் அதிக முதலீடு வருகிறது. அந்த நகரங்களை தவிர மற்ற இடங்களில் இருந்து மியூச்சுவல் பண்டுக்கு வரும் முதலீடு 19% உயர்ந்து ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது.
கடந்த வருடம் மார்ச் 31-ம் தேதி வரை ரூ.1.7 லட்சம் கோடியாக இருந்த முதலீடு இப்போது ரூ.2.02 லட்சம் கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி மியூச்சுவல் பண்ட் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக சிறு நகரங்களில் இருந்து முதலீடு உயர்ந்திருக்கிறது.
புதுடெல்லி (என்சிஆர்), மும்பை (நவி மும்பை மற்றும் தானே), கொல்கத்தா, சென்னை, பெங்க ளூரு உள்ளிட்ட 15 நகரங்களில் இருந்து மியூச்சுவல் பண்டுக்கு அதிக முதலீடுகள் வருகின்றன.