

பங்குச் சந்தையில் ஏமாற்றுவோர் அனைவரும் ஒரே விதமாகத்தான் நடத்தப்படுவர் என்று பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார்.
ஏமாற்றுவோரில் சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பேதம் ஏதும் கிடையாது. பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, தனி நபராக இருந்தாலும் சரி அவர்கள் செய்த குற்றம் மட்டுமே பார்க்கப்படும். அனைவரும் ஒரே விதமாகத்தான் நடத்தப்படுவர் என்று அவர் கூறினார். ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்ட பெரிய நிறுவனங்களை செபி தப்பிக்க விட்டுவிட்டதாகக் கூறப்படுவது தவறு என்ற அவர் பெரிய நிறுவனங்கள் தங்களிடம் செபி கடுமையாக நடந்து கொள்வதாகக் கூறியதையும் சுட்டிக் காட்டினார்.