மியூச்சுவல் பண்ட் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை: செபி தலைவர் யு.கே.சின்ஹா தகவல்

மியூச்சுவல் பண்ட் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை: செபி தலைவர் யு.கே.சின்ஹா தகவல்
Updated on
2 min read

மியூச்சுவல் பண்ட் துறையை ஊக்குவிக்கும் விதமாக இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை விற்க செபி அனுமதி அளிக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கான விதிமுறைகள் விரை வில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்கள் வாடிக்கை யாளர் யார் (கேஒய்சி) வழிமுறை களை எளிமையாக்கி அதனை ஆன்லைன் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும் என்று செபி நினைக்கிறது.

இது குறித்து செபி தலைவர் யு.கே.சின்ஹா பேசியதாவது;

மியூச்சுவல் பண்ட் நிறுவ னங்களை ஊக்குவிக்கும் நடவடிக் கையாக ஏற்கெனவே நந்தன் நிலக் கேணி தலைமையில் கமிட்டி அமைக்கபட்டு, அவர்கள் மூன்று கட்டமாக கூட்டத்தை நடத்தியுள் ளனர். இதன் அடிப்படையில் இன்னும் இரண்டு மாதங்களில் மியூச்சுவல் பண்ட் விநியோக திட்டத்தில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும். மியூச்சுவல் பண்ட் பரிமாற்றங்களை எளிதா கவும் வசதியாகவும் மாற்றுவதே இலக்கு என்று கூறினார். மேலும் மியூச்சுவல் பண்ட் திட்ட விநியோகத்தை முன்னுதாரணமாக மாற்ற முயற்சி எடுத்துக் கொண் டிருக்கிறோம்.

இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாடு செய்திருந்த `இந்தியன் கேபிடல் மார்க்கெட்’ மாநாட்டில் பேசிய சின்ஹா, ``கேஒய்சி நடை முறைகளை எளிதாகவும் ஆன்லைன் மூலமாகவும் நடை முறைப்படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்படுகிறது. மேலும் கையெழுத்து மற்றும் நபரின் அடையாளம் இல்லாமல் ஆன்லைன் மூலமாக அனைத்து பரிவர்த்தனைகளையும் உறுதி படுத்த முயற்சி செய்யப்படுகிறது” என்று கூறினார். மியூச்சுவல் பண்ட் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.13 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்களின் சமூக பொறுப் புணர்வு நடவடிக்கைகள் குறித்து சின்ஹா பேசியதாவது.

தற்போதைய சூழலில் பட்டி யலிடப்பட்ட முதல் 100 நிறுவ னங்கள் (சந்தை மதிப்பு அடிப் படையில்) தங்களது சமூக பொறுப்புணவு அறிக்கையை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த எல்லையை 500 ஆக விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும்.

சமூக பொறுப்புணர்வு அறிக் கையை நிறுவனங்கள் தங்களது ஆண்டறிக்கையில் வெளியிடும்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பட்டியலிடுவது குறித்து பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. செபியின் விதிமுறைகளில் எந்த சிக்கலும் இல்லை என்று இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட் மென்ட் டிரஸ்ட் குறித்து குறிப் பிடும்போது, விதிமுறைகள் உருவாக்கப்பட்டு விட்டது. வரித் தொடர்பாக அரசு சில விண்ணப் பங்களை பெற்றுள்ளது, வரி அமைப்புகளிடம் பேசி வருகிறோம். இதில் அரசு சாதகமான பார்வை யை மேற்கொள்ளும் என நம்பு வதாகவும் குறிப்பிட்டார்.

செபி கமாடிட்டி மார்கெட் குறித்தும் திட்டமிட்டு வருகிறது. முழு கட்டுப்பாடு மற்றும் புதிய பொறுப்புகளை குறிக்கோளாக கொண்டதாக இது இருக்கும் என்றார்.

புதிய திட்டங்களுக்கு தேவை இருக்கிறது. அதில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வர்த் தகம் செய்வது உள்ளிட்ட முடிவுகள் இன்னும் சில மாதங்களில் எடுக் கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in