தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை நெருங்குகிறது

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை நெருங்குகிறது
Updated on
1 min read

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக தங்கம் விலையில் ஏற்றம்தான் அதிகமாக இருக்கிறது.

இதற்கிடையே, இந்த மாதத்தில் 4-வது முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.24,968-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,121-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, நேற்று முன்தினம் ரூ.3,092-க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை உயர்வினால் சென்னையில் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந் தது. வழக்கத்தை விட வர்த்தகமும் சிறிய அளவில் குறைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்த குமார் கூறும்போது, ‘‘சர்வதேச அள வில் டாலரின் மதிப்பு சற்று குறைந் துள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. வழக் கத்தைவிட சுமார் 30 சதவீதம் முத லீடு அதிகரித்து விட்டது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 70 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கு விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்களிடம் இருக்கும் தங்கத்தை எங்களிடம் விற்பனை செய்ய முன்வருகின்றனர்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in