மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்
Updated on
1 min read

மோசடி நிதி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

அனைத்து இந்திய பிராந்திய மொழிகளிலும் டி.வி. வானொலி, பத்திரிகைகள் வாயிலாக இந்த பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதற்காக தொழில்முறையில் விளம்பரப் படங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

வங்காளம், அசாமி, ஒரியா, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த பிரச்சாரம் செய்யப்படுகிறது.

மோசடி நிதி நிறுவனங்கள் அதிகம் உள்ள மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முதல் கட்டமாக இந்த பிரசாரம் செய்யப்படுகிறது. நிதி நிறுவன மோசடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இப்பகுதியில்தான் உள்ளனர்.

ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து லட்சம் ரூபாயை எதிர்பார்ப்பது எவ்விதம் சாத்தியம் என்ற கேள்வியோடு இந்த பிரச்சாரம் அமையும்.

செவி வழி செய்தியாக பரப்பப்படும் மோசடி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களி டையே ஏற்படுத்த செபி பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளது.

ரூ. 50 ஆயிரம் முதலீடு செய்தால் ஆறு மாதம் கழித்து மாதம் ரூ. 10 ஆயிரம் கிடைக்கும் என்ற நிதித் திட்டத்தை ஏஜென்ட் விளக்குவதைப் போன்ற விளம் பரத்தையும் செபி வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in