

பங்குச் சந்தையில் தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்ட ஆண்டாக, செபி-யின் கரத்தை வலுப்படுத்திய ஆண்டாக 2013 அமைந்தது என்றால் அதில் மிகையில்லை.
மிகப் பெரிய நிறுவனமான சகாரா குழுமம் முதல் சிறு நிறுவனமாக இருந்தாலும், முதலீட்டாளர்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓட நினைக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்ததும் இந்த ஆண்டில்தான். மேலும் முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க பல்வேறு விதிமுறைகளைக் கொண்டு வந்ததும் 2013-ல்தான். 2013-ம் ஆண்டில் செபி எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட அதன் தலைவர் யு.கே. சின்ஹா, நிறுவன நிர்வாகம் மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு சார்ந்த தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
பொதுவாக செபி சார்ந்த வழக்குகளை உயர்நீதிமன்றத்திடம் கொண்டு செல்லுமுன்பு அதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு ள்ளன. இதுபோன்ற வழக்குளில் உரிய கவனம் செலுத்தி அதன்பிறகு தனது கருத்தை நீதிமன்றத்தில் செபி அளிக்கும். இதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சின்ஹா கூறினார்.
சிறு முதலீட்டாளர்களை பாதிக்கும் வகையில் முறைகேடான வர்த்தகத்தில் ஈடுபடுவோரைக் கண்டறிந்த பிறகே இத்தகைய நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார். பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்கள் தாங்கள் மேற்கொள்ளப் போகும் திட்டங்கள் குறித்து முன்கூட்டியே முதலீட்டாளர்களின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது.
சிறிய முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்குரிய ஒப்பந்த விதிகளை பின்பற்றாத நிறுவனங்களின் வர்த்தகம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படும். தவறு செய்யும் நிறுவன மேம்பாட்டாளர்களுக்கு அபராதம் விதிப்பது, அவர்களுடைய பங்குகளை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
புதிய நிறுவன சட்டங்கள், நிறுவன நிர்வாகம், செயல் பாடுகளில் புதிய பரிணாமத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த சமயத்தில்தான் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. இது தவிர, முதலீட்டாளர் குறை கேட்பு முறைகளை மேலும் சிறப்பாக செயல்பட செ நடவடிக்கை எடுத்தது. முன்பு 4 மையங்களில் மட்டுமே முதலீட்டாளர் குறை கேட்பு மையம் இருந்தது. இப்போது இது 16 மையங்களுக்கு விரிவாக்கப் பட்டது. இது தவிர, கம்ப்யூட்டர் பதிவில் செயல்படும் குறை கேட்பு மையம் ’ஸ்கோர்ஸ்’, சிறப்பாக செயல்படுகிறது.
இதற்கென தனியே கால் சென்டர் அமைக்கபட்டது. இதனால் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் 14 பிராந்திய மொழிகளில் புகார் களை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டதாக சின்ஹா கூறினார். இத்தகைய நிறுவனங்களில் 16 பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும். இந்நிறுவனங்கள் முதலீடு திரட்டுவது, டிவிடெண்ட் அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதாக சின்ஹா கூறினார்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்ளுக்கான கலர் கோடிங் கொண்டு வரப்பட்டதையும் சின்ஹா சுட்டிக்காட்டினார்.