

புதுடெல்லி: மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் சில்லறைப் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.54 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், பல்வேறு பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணிசமாக குறைக்கப்பட்டது.
மேலும், உணவுப் பொருட்களின் விலையும் மிகவும் சரிவடைந்ததையடுத்து அக்டோபரில் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் இதுவரை கண்டிராத வகையில் 0.25% ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக பணவீக்ம் ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.