

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது கவலையளிக்கிறது. ஆனால் அதைவிட வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்பது மிகுந்த கவலையளிக்கும் விஷயம் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் குறிப்பிட்டார். இத னால் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கைகள் அதிகம் எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
ரூபாயின் மதிப்பு சரிவு காரண மாக சில சாதக அம்சங்கள் இருந் தாலும், அவை அனைத்தும் இரண் டாம்பட்சமே என்று குறிப்பிட்ட அவர், ரூபாயின் மாற்று மதிப்பு ஸ்திரமாக இருக்கவேண்டும் என் பதில்லை, அவ்விதம் இருக்கவும் முடியாது. இயல்பாக எந்த மதிப் பில் இருக்க வேண்டுமோ அந்த மதிப்பில் ரூபாய் இருக்கிறது. சில நாடுகள் வேண்டுமென்றே தங்களது கரன்சிகளின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்ற அவர், அது தவறான நடவடிக்கை என்றார்.
ரூபாயின் மதிப்பை உயர்த்து வது என்பது இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியமாகாது என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் கூறினார்.
பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை மட்டுமே கணக்கில் கொண்டு உருவாக்கப்படுவதில்லை. மிகப் பெரிய பொருளாதார நாடு களான அமெரிக்கா, சீனா மற் றும் ஐரோப்பிய நாடுகள் ஒரு போதும் நிதிப் பற்றாக்குறையை கவனத்தில் கொள்வதில்லை என்றார்.
நமது தேவைகளுக்கு தகுந்த வாறு நமது கொள்கைகள் இருக்க வேண்டும். தனியார் முதலீடு கள் குறையும்போது, அரசின் செலவிடும் நடவடிக்கை அதி கரிக்கும் என்று குறிப்பிட்டார். இதனால் நாம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். தற்போது உலக அளவில் நமது வர்த்தக அளவு மிகவும் குறைவாக உள்ளது. சேவைத் துறையைப் பொறுத்தமட்டில் நமது பங்களிப்பு சீனாவை விட குறைவாகவே உள்ளது என்றார். ஜூலை மாதத்தில் நமது வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக 1,802 கோடி டாலர் அள வுக்கு அதிகரித்துள்ளது. இந்த சம யத்தில் வட்டி அதிகரிப்பு உள்ளிட்ட நிதிக் கொள்கை முடிவுகள் மேலும் சிக்கலையே உருவாக்கும் என்றார்.