3 மாதங்களில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அசென்ச்சர்

3 மாதங்களில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அசென்ச்சர்
Updated on
1 min read

புதுடெல்லி: முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் ஒன்றான அசென்ச்சர் கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துக்கு விரைவாக மாறுவதும் தேவைக் குறைவும் இதற்கு காரணமாக கூறியுள்ளது.

865 மில்லியன் டாலர் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுவதாகவும் வரும் மாதங்களில் மேலும் ஆட்குறைப்புக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அசென்ச்சர் தலைமை செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் கூறுகையில், “குறைந்த காலக்கெடுவுக்குள் எங்களுக்கு தேவையான திறன்களை பெறுவதற்கு சாத்தியமில்லாததால் எங்கள் நிறுவனம் ஆட்களை வெளியேற்றி வருகிறது. ஏஐ சார்ந்த தீர்வுகளுக்கான வாடிக்கையாளர் தேவைக்கேற்ப நிறுவனம் தனது ஊழியர்கள் எண்ணிக்கை விரைவாக மாற்றி அமைக்க உள்ளது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in