

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் 2 பொருட்கள் வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் கைத்தறி, துணி நூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், வாடிக்கை யாளர்களை ஈர்க்கும் விதமாக, விற்பனை நிலையங்களில் பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில், 2 பொருட்கள் வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை: "கோ-ஆப்டெக்ஸ் சந்தை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விற்பனை மேம்படுத்துவதற்காக பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் 2 பொருட்கள் வாங்கினால் ஒரு பொருள் இலவசமாக வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் விற்பனை நிலையங்களை ஞாயிற்றுக் கிழமை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, வார இறுதி நாட்களில் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் வசதியை பூர்த்தி செய்யும்.
விற்பனை செயல்திறனை அடிப்படையாக கொண்டு, சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விற்பனை நிலையங்கள், பெங்களூரு, மும்பை, விஜய வாடா ஆகிய வெளி மாநில நகரங்களிள் உள்ள விற்பனை நிலைய ங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட 50 விற்பனை நிலையங்கள் பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் விற்பனை நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமை திறக்கப்படும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.