

ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (ஆர்இஐடி) மற்றும் இன்பிராஸ்டிரக்சர் இன்வெஸ்ட்மென்ட் அறக்கட்டளைகள் (ஐஎன் விஐடி) அமைப்பதற்கான வழிகாட்டுதலுக்கு பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செபி தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார். ஆர்இஐடி முறை பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய முதலீடுகளுக்கு உரிய வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோன்ற சலுகை ஐஎன்விஐடி-க்கும் அளிக்கப்பட வேண்டும் என்று சின்ஹா கூறினார்.
கட்டமைப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வங்கிகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதற்குப் பதில் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டால் நிதி கிடைப்பது பிரச்சினையாக இருக்காது என்றும் சின்ஹா கூறினார்.
அந்நிய முதலீட்டாளர்கள், உள்ளூர் காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வு கால நிதியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) உள்ளிட்டவை இந்த அறக்கட் டளையில் முதலீடு செய்யலாம் என்றார் சின்ஹா.