65 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மருத்துவ காப்பீடு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய காப்பீடு ஒழுங்கு முறை ஆணையத்தின் புதிய விதிகள் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பழைய விதிகளின்படி 65 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே மருத்துவக் காப்பீடு வசதியைப் பெற முடியும்.

புதிய விதிகளில் மருத்துவ காப்பீட்டுக்கான 65 வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டு உள்ளது. இனிமேல் 65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு வசதியைப் பெறலாம்.

மருத்துவக் காப்பீடுகளை எடுக்கும் நபர் தனது உடல்நலம்தொடர்பான அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். சில நேரங்களில் மருத்துவ செலவுக்கான இழப்பீட்டை கோரும் போது, காப்பீடுதாரர் நோய்களை மறைத்து காப்பீடு எடுப்பதாக நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன. இதனால் காப்பீடுதாரர் இழப்பீடு பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. புதிய விதிகளில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in