Published : 24 Mar 2024 04:04 AM
Last Updated : 24 Mar 2024 04:04 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,185-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24காரட் தங்கத்தின் விலை பவுன்ரூ.53,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.80,500 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x