

கணினி உதிரிபாக தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லாஜிடெக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை எலெக்ட்ரானிக் பார் இமேஜிங் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2010-ம் ஆண்டு டிசம்பர் வரை ஹாவ்லெட்-பேக்கார்டு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
லாவ்யன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்டில் பிஸினஸ் இன்ஜினீயரிங் பிரிவில் முதுநிலை பட்டமும் கெல்லாக் பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
1996-ம் ஆண்டு ஹாவ்லெட் பேக்கார்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.