தனித்துவமான அளவுகளில் இந்திய காலணிகள் - அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

தனித்துவமான அளவுகளில் இந்திய காலணிகள் - அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய காலணிகளுக்கென்று தனித்துவமான அளவுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

“காலணி வடிவமைப்பில் நாம் வெளிநாட்டு அளவுகளை சார்ந்திருக்கிறோம். இந்நிலையில், இந்திய காலணிகளை தனித்துவப்படுத்தும் வகையில் விரைவிலேயே இந்தியாவுக்கான தனித்துவ அளவுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்” என்று அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

நேற்றுமுன்தினம் டெல்லியில் நடைபெற்ற ‘இந்திய சர்வதேச காலணி கண்காட்சி 2023’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது, “காலணி தயாரிப்பில் உலகின் மிகப் பெரிய நாடாக மாறுவதற்கான கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவில் அதிக அந்நிய செலாவணியை ஈட்டும் முக்கிய துறைகளில் ஒன்றாக காலணி மற்றும் தோல் தயாரிப்பு துறை உள்ளது. தவிர, அத்துறை மூலம் 45 லட்சம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

தோல் தயாரிப்புகளில் ஈடுபடும்நிறுவனங்களில் 95 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான். மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாபுரி காலணிகள், ராஜஸ்தானின் மொஜாரி காலணிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்திய காலணி வடிவமைப்புகளை சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in