

பிராங்ளின் டெம்பிள்டன் இன்வெஸ்ட்மென்ஸ் (இந்தியா) நிறுவனம் `வாழ்க வளமுடன்’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பரஸ்பர நிதித் திட்டங்கள் (மியூச்சுவல் பண்ட்) குறித்து மக்கள் அறிந்து கொண்டு அதில் முதலீடு செய்து பயனடையச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) உதவியோடும் பரஸ்பர நிதித் திட்டங்களின் கூட்டமைப்பு (ஏஎம்எஃப்ஐ) 10 மாவட்டங்களில் இத்தகைய விழிப்புணர்வை நடத்தவுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இத்தகைய முகாம் நடத்த உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ஆனந்த் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.