பங்குச்சந்தை  | சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை  | சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (புதன்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயர்வடைந்து 63,416 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி12 புள்ளிகள் உயர்ந்து 18,828 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:46 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 170.45 புள்ளிகள் உயர்வடைந்து 63,498.15 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 39.15 புள்ளிகள் உயர்ந்து 18,855.85 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் குழப்பமான சூழ்நிலைகள் நிலவிய போதிலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. நிதி, எஃப்எம்சிஜி பங்குகள் உயர்வுக்கு வழிவகுத்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன.

சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், கோடாக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in