

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தனத்தையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
"சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளில் கடவுளின் குழந்தைகளான அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடாமுயற்சிகளால் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்த மாற்றுத்திறனாளிகளை மதித்து நடத்திடுவோம்.
உலகம் திரும்பிப்பார்க்கும் வகையில் அவர்கள் சாதனைகள் புரிந்திட ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திடுவோம். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ற வகையில் நம்முடைய சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தநாளில் உறுதியேற்றிடுவோம். மனிதம் போற்றுவோம், மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடுவோம்."
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.