

ஈரோடு அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் முத்துக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ஏழு பேர், ஆம்னி வேன் மூலம் பழனி முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு இன்று மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஈரோட்டைத் தாண்டி விளக்கேத்தியை அடுத்த பாரப்பாளையம் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, வேன் மீது திடீரென மோதியது. இதில், நான்கு பெண்கள், ஒரு ஆண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த இருவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் விவரம் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து சிவகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.