விரைவு ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னையில் விரைவு ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டது. குறிப்பாக தண்டவாளம் பகுதியில் மழை நீர் தேங்கியதால் புறநகர் ரயில்கள் பல தாமதமாக இயக்கப்பட்டது. மேலும், வெளியூர்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் பல திருப்பிடப்பட்டதுடன், புதிய நேர அட்டவணைகளில் ரயில்கள் இயக்கப்பட்டன.

இதனிடையே, தண்டவாளங்களில் தேங்கிய மழைநீரை அகற்றி ரயில்வே பணியாளர்கள் போக்குவரத்தை சரி செய்துள்ளனர். இதன் காரணமாக நாளை முதல் வழக்கமான அட்டவணையுடம் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;

"ரயில் எண். 06341 குருவாயூர் - திருவனந்தபுரம் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் நாளை நவம்பர் 17, 2021 அன்று தனது வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும் (முன்னதாக அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட குருவாயூர் மற்றும் திருச்சூர் இடையே பகுதி ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது)

முந்தாக ரயில் எண். 06327 புனலூர் - குருவாயூர் சிறப்பு ரயில் இன்று நவம்பர் 16, 2021 பயணத்தைத் அதன் வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது (முன்னர் அறிவிக்கப்பட்ட திருச்சூரில் குறுகிய நிறுத்தம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது)"

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in