தடுப்பூசி மட்டும்தான் வருங்காலத்தில் நம்மைப் பாதுகாக்கும்: புதுவை ஆளுநர் தமிழிசை

தடுப்பூசி மட்டும்தான் வருங்காலத்தில் நம்மைப் பாதுகாக்கும்: புதுவை ஆளுநர் தமிழிசை
Updated on
1 min read

தடுப்பூசி மட்டும்தான் வருங்காலத்தில் நம்மைப் பாதுகாக்கும் எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியை 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றுவதற்கு, கரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுப் பதிவு வீடியோ ஒன்றை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘புதுச்சேரி 100 சதவீத தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற வேண்டும் ஏன்? தடுப்பூசி மட்டும்தான் வருங்காலத்தில் கரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். 3-வது அலை, 4-வது அலை என எத்தனை அலைகள் வரட்டும். ஆனால், தடுப்பூசி மட்டும்தான் நம்மைப் பாதுகாக்கும்.

இப்போது கரோனா குறைந்துவிட்டது. ஏன்? தடுப்பூசி போடவேண்டும் என்ற ஒரு எண்ணம் மக்கள் மனதில் இருக்கிறது. தற்போது போடும் தடுப்பூசிதான் வருங்காலத்தில் கரோனாவிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆகவே தயவுசெய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கே மருத்துவக் குழுவினர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆகவே, உங்கள் தொகுதியில், உங்கள் பகுதியில் முகாம் நடக்கும் இடங்களைத் தேடிச்சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

நாம் எல்லாம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்.’’

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in