

கரீபியன் கடலில் இருக்கும் சிறிய தீவு ஹெய்தி. கியூபா, ஜமைக்காவுக்கு கிழக்கேயும், பஹாமா நாட்டுக்கு தெற்கேயும், டோமினிக் குடியரசுடன் எல்லைகளைப் பகிர்ந்தும் அமைந்துள்ளது.
ஹெய்தியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரிலிருந்து மேற்கே 125 கி.மீ தொலைவில் மையமாகக் கொண்டு் கடந்த சனிக்கிழமை திடீரென 7.2 புள்ளி ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தால், ஏராளமான கட்டிடகள்,வீடுகள், வணிக வளாகங்கள் இடிந்து தரைமட்டமாகின.
ஹெய்தி நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர், 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அந்த அதிர்வலையில் இருந்து அந்நாட்டு மக்கள் மீள்வதற்குள்ளாகவே, அங்கே புயல் வீசியது.
இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் அனுப்பியுள்ள செய்தியில், ஹெய்தி மக்களுக்கான செய்தி இது. நீங்கள் தனியாக இல்லை.
இந்தக் கடுமையான காலகட்டத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பின் அங்கே மனிதாபிமான அடிப்படையில் மருத்துவப் பொருட்கல், சுகாதார உபகரணங்கள், சுத்தமான குடி தண்ணீர், அவசர கால் வசிப்பிடங்கள் என அனைத்தையும் ஐ.நா. ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.