மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே கிறிஸ்தவ குருசடியை அகற்றக்கோரி பாஜகவினர் சாலை மறியல்: 135 பேர் கைது

மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே கிறிஸ்தவ குருசடியை அகற்றக்கோரி பாஜகவினர் சாலை மறியல்: 135 பேர் கைது
Updated on
1 min read

மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே அமைத்த கிறிஸ்தவ குருசடியை அகற்றக்கோரி இன்று சாலை மறியலில் ஈடுபட்ட 135 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக மாத்தூர் தொட்டிப்பாலம் விளவங்குகிறது. அதன் அருகே சமீபத்தில் கிறிஸ்தவ குருசடி அமைப்பதற்கான பணிகள் நடந்தது. இதற்கு பாஜக, மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்ட நிர்வாத்திடம் புகார் அளித்தனர். அப்போது, முறையான அனுமதியின்றி குருசடி அமைக்கக்கூடாது. அதுபோன்று அமைத்தால் அவற்றை அகற்றவேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் குருசடியை இதுவரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்காததால், இன்று மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே குருசடி அமைக்கப்பட்ட பகுதியில் பாஜகவினர், இந்து முன்னணி, மற்றும் இந்து அமைப்பினர் திரண்டனர்.

அவர்கள் திருவட்டாறில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் நேற்று மதியத்தில் இருந்து மாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் பாஜக உட்பட 135 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சாலைமறியலால் பதற்றம் நிலவியதை தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in