மது என நினைத்து சானிடைசரைக் குடித்த ஆட்டோ ஓட்டுநர் பலி: 2 பேருக்குத் தீவிர சிகிச்சை

உயிரிழந்த இளங்கோவன்.
உயிரிழந்த இளங்கோவன்.
Updated on
1 min read

அரியலூரில் மதுபானம் என நினைத்து சானிடைசரைக் குடித்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர் மேல அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (35). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரும், இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த மோகன் (37), சரவணன் (30) ஆகிய மூவரும் மது என நினைத்துக் கடந்த 7-ம் தேதி கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் சானிடைசரைக் குடித்துள்ளனர்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மூவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இதில், இளங்கோவனுக்கு உடல்நலம் மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (ஜூன் 9) உயிரிழந்தார்.

மோகன், சரவணன் ஆகியோர் அரியலூரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அரியலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in